செங்கற்பட்டிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. படாளம் என்ற இடத்துக்கு அருகில் உள்ள புலிப்பரக்கோயில் என்ற தலமே வட திருச்சிற்றம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
வியாக்ரபாதருக்கு நடராஜப்பெருமான் தனது நடனக்கோலத்தைக் காண்பித்தத் தலமாதலால் மேற்கண்ட பெயர்களால் வழங்கப்படுகிறது. அருணகிரிநாதர் தனது இரண்டு திருப்புகழ்ப் பாடல்களில் வடசிற்றம்பலம் என்று பாடுகிறார்.
மற்றொரு திருப்புகழ்ப் பாடலில் குறிப்பிடும் கோயில் மதுராந்தகம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது. ஆகவே, இரண்டு தலங்களையும் சேர்த்து வணங்கி முருகப்பெருமானின் அருளைப் பெறலாம். |